வெளிநாட்டு ஸ்டண்ட் டீம் உடன் கமல்ஹாசன்.. 'இந்தியன் 2' படத்தின் மாஸ் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,March 09 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் அதிரடி ஆக்சன் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் வெளிநாட்டு ஸ்டண்ட் நடிகர்கள் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளிநாட்டு ஸ்டண்ட் நடிகர்கள் டீமுடன் கமல்ஹாசன் இருக்கும் புகைப்படம் கசிந்து உள்ளது.

வெளிநாட்டு ஸ்டண்ட் நடிகர்கள் அனைவரும் 'இந்தியன் 2’ படம் போட்ட டீ சர்ட் அணிந்துள்ள நிலையில் அவர்களுடன் சிரித்துக் கொண்டே கமலஹாசன் பேசும் இந்த ஸ்டில் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகியிருக்கிறது. இந்த ஸ்டில்லை பார்க்கும்போது இந்த படத்தில் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

செம ஸ்மார்ட் லுக்கில் அஜித்.. 'ஏகே 62' பட கெட்டப்பா?

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் 

சிவகார்த்திகேயனின் அடுத்த சொந்த படம்.. சூப்பர் அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் இதுவரை 5 சொந்த படங்களை தனது எஸ்கே புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ள நிலையில் 6வது ஆறாவது தயாரிப்பு திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று

தயாரிப்பாளர் வி.ஏ.துரையிடம் போனில் பேசிய ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா?

மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் வி.ஏ துரையிடம் போனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன. 

ஆர் ஜே பாலாஜியின் 'ரன் பேபி ரன்': டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் தேதி..!

ஆர்ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் 'ரன் பேபி ரன்' திரைப்படம், மார்ச் 10, 2023 முதல்,

நடிகை நக்மாவின் வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி.. அதிர்ஷ்டவசமாக தப்பித்த பெரும் தொகை..!

நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர் ஒருவர் சுமார் ஒரு லட்ச ரூபாய் எடுத்துவிட்டதாகவும் ஆனால் நக்மா சுதாரித்துக் கொண்டதை அடுத்து பெரும் தொகை தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.