எல்லா கேள்விகளுக்கு இன்று பதில்: பிக்பாஸ் கமல் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி முதலில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஆரம்பமாகி இன்று ஒரு மாநிலமே அந்த நிகழ்ச்சி குறித்து விவாதிக்கும் அளவுக்கு உள்ளது. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களும், ஒருசில அமைப்புகளும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் இந்த நிகழ்ச்சியை தடை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் செய்யும் தவறுகள், பேசும் சர்ச்சைக்குரிய பேச்சுகள் இவற்றிற்கு யார் பொறுப்பு? இந்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சியா? நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனா? அல்லது பங்கேற்பாளர்களா? போன்ற கேள்விகள் அனைவரின் மனதிலும் எழுகின்றது.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் கமல்ஹாசன் கூறுவதாவது: உங்களுக்குள் இருக்கும் கோபம் எனக்குள்ளும் இருக்கின்றது, உங்களுக்குள் இருக்கும் கேள்விகள் எனக்குள்ளேயும் இருக்கின்றது. நம் எல்லாருடைய கேள்விகளுக்கும் இன்று இரவு விடை கிடைக்கும்' என்று கூறியுள்ளார். எனவே இன்றைய நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

உலகநாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி ரகுராம் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தொப்புள் கருத்துக்காக மன்னிப்பு கேட்ட நடிகை டாப்சி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்சி, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி என பிசியான நடிகையாக மாறினார்.

கமல்ஹாசன் முறையாக வரி செலுத்தியுள்ளாரா? அமைச்சர் கேள்வி

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தைரியமான ஒருசில கருத்துக்களை முன்வைப்பதும் அந்த கருத்துக்கள் சர்ச்சைகளாக மாறுவதுமான காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

விமர்சித்தால் மட்டும் போதாது! களத்தில் இறங்கி போராடுங்கள்: கமலுக்கு கருணாஸ் வேண்டுகோள்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது பேட்டியிலும், சமூக வலைத்தள பக்கத்திலும் சமூக, அரசியல் கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார்.

ரஜினி, விஜய், சூர்யா பட்டியலில் இணைந்த தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', தளபதி விஜய் நடித்த 'தெறி', சூர்யா நடித்த 'எஸ்3' ஆகிய படங்களின் மலேசிய ரிலீஸ் உரிமைகளை பெற்ற நிறுவனம் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. மேற்கண்ட மூன்று படங்களும் மலேசியாவில் நல்ல வசூலை குவித்த நிலையில் தற்போது இதே நிறுவனம் தனுஷின் 'விஐபி 2' படத்தின் மலேசிய ரிலீஸ் உரிமையை மிகப்பெர&#