close
Choose your channels

ரஜினி-கமல் இணைந்து பார்க்கும் பிரபல ஹீரோவின் படம்?

Wednesday, March 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'சதுரங்க வேட்டை' என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இந்த டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. ராமு செல்லப்பா இயக்கியுள்ள இந்த படம் மார்ச் 24ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தபோது நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு தகவலை வெளியிட்டார். 'எங்கிட்டே மோதாதே' திரைப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் நடிகர்களுக்கு கட்-அவுட் வைக்கும் கலாச்சாரம் குறித்த கதை என்றும் கூறினார்
இந்த படத்தில் நடித்திருக்கும் தன்னுடைய கேரக்டர் ரஜினிக்கு கட்-அவுட் வைப்பது போலவும், தன்னுடைய சக நடிகர் ராஜாஜி கமல்ஹாசனுக்கு கட்-அவுட் வைப்பது போலவும் காட்சிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர்களுக்காக சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்யவிருப்பதாகவும், இருவருக்கும் வசதியான தேதி ஒன்றில் அந்த சிறப்பு காட்சி இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
நட்டி நட்ராஜ், ராஜாஜி, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நடராஜன் சங்கரன் என்பவர் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.