அம்பயர்களையே கதிகலங்க வைத்த சிஎஸ்கே வீரர் டூப்ளசிஸ்… நடந்தது என்ன?

ஐபிஎல் 2021 தொடருக்கான நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சிஎஸ்கே அணிக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிக்காக முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்த பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே சொதப்ப தொடங்கியது. மேலும் சிஎஸ்கே வீரர் தீபக் சாஹரின் வேகப்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்காத பஞ்சாப் வீரர்கள் பலரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர்.

இந்த அணியில் இறுதியாகக் களம் இறங்கிய ஷாருக்கான் மட்டுமே அதிகப்பட்சமாக 47 ரன்களை எடுத்து இருந்தார். இதனால் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை எடுத்து இருந்தது. இதனால் 107 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ரூத்ராஜ் கெயிக் வாட் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து கதிகலங்கிப் போன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பின்னர் ரூப்ளசிஸ்-மொயின் அலி கூட்டணியால் வெற்றி வாய்ப்பை பெற முடிந்தது.

இந்த வெற்றிக்கு நடுவே டூப்ளசிஸ்க்கு நடந்த ஒரு சம்பவம்தான் தற்போது பெறும் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 14 ஆவது ஓவரில் பஞ்சாப் அணியின் ரைலே மெரிடித் பந்து வீசிக் கொண்டு இருந்தார். அதில் 5 ஆவது பந்து பவுன்சராக சென்று டூப்ளசிஸ் உடைய கிளவுஸில் பட்டு கேட்ச் ஆனது. இதையடுத்து நடுவர் அனில் குமார் சவுத்ரி அவுட் கொடுக்க முயன்றார். இருந்தாலும் அதே ஓவரில் ஏற்கனவே ஒரு ஷார்ட் பால் விழுந்து இருந்தது. ஒருவேளை ஒரு ஓவரில் 2 ஷார்ட் பால் வீசி இருந்தால் அது நோ பாலாக மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள முடியும். இதனால் இது ஷார்ட் பாலா என்பதை நடுவர் பரிசோதிக்க விரும்பினார். எனவே 3 ஆவது நடுவரின் ஆலோசனையை வேண்டினார்.

இதையடுத்து 3 ஆவது நடுவர் அது பவுன்சர் பந்தா? இல்லையா? என்பதைக் கூட பார்க்காமல் பந்து தோள்பட்டைக்கு கீழ்தான் சென்றது, எனவே அவுட் கொடுத்து விடுமாறு கூறினார். நல்லவேளை இதை சரியாகப் புரிந்து கொள்ளாத நடுவர் நாட் அவுட் கொடுத்து விட்டார்.

இப்படி நடக்கும்போதே முற்றிலும் குழம்பி போய் இருந்தார் டூப்ளசிஸ். அடுத்து மீண்டும் 3 ஆவது நடுவர் அவுட் கொடுக்குமாறு பரிந்துரைத்தார். ஆனால் இதே நேரத்தில் டூப்ளசிஸ் கிரவுண்டை விட்டு செல்வதற்கு மறுப்பு தெரிவித்ததோடு தன் கையில் பந்து படவே இல்லை என்பதை விளக்கி டிஆர்எஸ் முறையில் ரிவ்வியூவ் செய்தார். இதனால் 3 ஆவது நடுவர் அல்ட்ரா எட்ஜ் பரிசோதனை மூலம் நாட் அவுட் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவத்தை அடுத்து கிரிக்கெட் கிரவுண்டில் இருந்த அனைவருமே சிறிது நேரம் குழம்பி போய் இருந்தனர்.

இதனால் ஒருவழியாக டூப்ளசிஸ் நாட் அவுட் ஆக அவருடன் கூட்டணி சேர்ந்த மொயின் நன்றாக விளையாடி 46 ரன்களையும் டூப்ளசிஸ் 36 ரன்களையும் எடுத்து அணியை வெற்றிப் பெறச் செய்தனர். ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் சென்னை சிஎஸ்கே அணி தோற்ற நிலையில் தற்போது தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து இருக்கிறது. இதனால் சிஎஸ்கே உற்சாகம் அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.