close
Choose your channels

நம்பவே முடியவில்லை: 'விக்ரம்' வசூல் குறித்து உதயநிதி  பதிவு!

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் இந்தியாவை பொருத்தவரை கடந்த சில மாதங்களில் ’புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ‘கேஜிஎப் 2’ ஆகிய திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமான வசூல் செய்தாலும் தமிழ் படம் ஒன்று இதேபோன்று வசூல் செய்ய வேண்டும் என்ற ஆசை தமிழ் திரையுலகிற்கு இருந்தது. அந்த ஆசையை ‘விக்ரம்’ திரைப்படம் தற்போது பூர்த்தி செய்துள்ளது.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் ‘விக்ரம்’ படத்தின் வசூல் குறித்து தனது சமூக வலைத்தளத்தில், ‘‘விக்ரம்’ திரைப்படத்தின் வசூல் நம்பமுடியாத அளவில் உள்ளது என்றும் இந்த வார இறுதியில் உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ பல சாதனைகளை முறியடிக்கும் போல் தெரிகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் வசூல் குறித்து டிரேடிங் வட்டாரங்கள் கூறிய போது ’விஸ்வாசம்’ படத்தை அடுத்து மிக வேகமாக அதிக வசூல் செய்த படம் ‘‘விக்ரம்’ மட்டுமே என்றும் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.