close
Choose your channels

அன்லிமிடெட் பாப்கார்ன் வழங்கிய திரையரங்கம்: எவ்வளவு ரூபாய் தெரியுமா?

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

450 ரூபாய்க்கு எவ்வளவு பெரிய பாத்திரம் கொண்டு வந்தாலும் அந்த பாத்திரம் நிறையும் அளவுக்கு பாப்கார்னை தாய்லாந்து திரையரங்கம் வழங்கி வருகிறது.

தாய்லாந்து தலைநகர் டாக்காவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் 450 ரூபாய்க்கு அன்லிமிடெட் பாப்கார்னை வழங்குவதாக திரையரங்கு ஒன்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து பெரிய பக்கெட், பெரிய அண்டா போன்ற பாத்திரங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்கள் நிறைய பாப்கார்ன் வாங்கி செல்கின்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது

எவ்வளவு பெரிய பாத்திரம் எடுத்து வந்தாலும் அந்த பாத்திரம் நிறைய 450 ரூபாய்க்கு பாப்கார்ன் வழங்கப்படும் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் வேகமாக பரவி அந்த திரையரங்கில் பாப்கார்னை வாங்க குவிந்து வருகின்றனர். ஒருசிலர் பெரிய பெரிய பாலிதீன் பை, சாக்குமூட்டை உள்பட பல வகைகளில் பாப்கார்னை வாங்கி செல்கின்றனர்

ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஒருசில பிவிஆர் திரையரங்குகளிலும் அன்லிமிடெட் பாப்கார்ன் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.