ஒரே மாதத்தில் சிறுவனை 8 முறை துரத்தி துரத்தி கொத்திய பாம்பு!!! வினோதச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

 

உத்திரப்பிரதேசத்தில் ஒரு சிறுவனை பாம்பு ஒன்று 8 முறை துரத்தி துரத்தி தாக்கிய வினோதச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. பாம்பு கரு வைத்து விட்டால் அவனை கொல்லாமல் விடாது என்பது போன்ற கருத்துக்கள் புராணக் கதைகளில் இடம் பெற்றிருக்கும். அப்படியொரு சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்று இருக்கிறது. 8 முறை ஒரே பாம்பு சிறுனை தாக்கியபோதும் சிறுவன் இன்னும் நல்ல உடல் நிலையில் இருக்கிறான் என்பதுதான் இன்னொரு ஆச்சர்யம்.

உத்திரப்பிரதேசத்தின் பஸ்தி மாவட்டம் அடுத்த ராம்பூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் யஷ்ராஜ் மிஸ்ரா என்ற 17 வயது சிறுவன் கடந்த மாதம் உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறான். பகதூர்பூர் என்ற கிராமத்தில் உள்ள ராம்ஜி சுக்லா என்ற அவனது மாமா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு ஒரு பாம்பு சிறுவனைக் கடித்து இருக்கிறது. உடனே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறான். சிகிச்சை முடிந்து பின்னர் மீண்டும் தனது சொந்த ஊருக்கே அழைத்து வரப்பட்டிருக்கிறான்.

ஊருக்கு வந்தவுடன் அதே பாம்பை சிறுவன் பார்த்ததாகவும் மீண்டும் அவனைக் கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். இந்நிலையில் மீண்டும் மீண்டும் அதே பாம்பு சிறுவனை 8 முறை தாக்கியதாக அவனது தந்தை சந்திரமவுலி மிஸ்ரா குறிப்பிடுகிறார். சிறுவனும் தன்னை தாக்கியது ஒரே பாம்புதான், இதுவரை 8 முறை என்னைக் கடித்து விட்டது எனப் பரிதாபமாகக் கூறியிருக்கிறான்.

ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவனது உயிரைப் போராடிக் காப்பாற்றி இருக்கின்றனர். இதனால் தற்போது சிறுவனின் குடும்பம் மந்திரவாதியை நாடியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே சிறுவனை 8 முறை ஒரு பாம்பு தாக்கியது குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இப்படிகூட நடக்குமா எனப் பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.