ஒரே குடும்பத்தில் 32 பேருக்குக் கொரோனா!!! பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 32 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதிச்செய்யப் பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. பண்டா மாவட்டத்தின் புட்டா குடான் என்ற பகுதியில் வசித்துவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 32 பேருக்குக் கொரோனா உறுதிச்செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவதை இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொடக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவில் 1000 என்ற கணக்கில் இருந்த கொரோனா எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 356 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உலக அளவிலும் இந்தியா கொரோனா எண்ணிக்கையில் தொடர்ந்து 3 ஆவது இடத்திலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் 1045 உயிரிழப்புகள் கொரோனாவால் ஏற்பட்டு இருக்கின்றன. அதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 66 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் 8.01 லட்சம்பேர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்தியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் நேற்று ஒரேநாளில் 62 ஆயிரத்து 026 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு வீடு திரும்பி உள்ளனர் என்றும் ஒட்டுமொத்தமாக 29.01 லட்சம்பேர் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 37 லட்சத்து 37 ஆயிரத்து 523 பேருக்கு உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.