போலீசார் கடுமையான தாக்குதல்....! பரிதாபமாக பறிபோன சிறுவன் உயிர்...!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஊரடங்கை மீறியதாக உத்திரப்பிரதேசத்தில் சிறுவனை காவல் துறையினர் கடுமையாக தாக்கியதில், அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2-ஆம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், பல்வேறு மாநிலங்களும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளன. உத்திரப்பிரதேச மாநிலத்திலும், வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில் உத்திரப்பிரதேசத்தில், உன்னாவ் என்ற மாவட்டத்தில் காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பங்கர்மாவ் என்ற பகுதியில், வீட்டிற்கு அருகில் 17 வயது சிறுவன் ஊரடங்கு விதிகளை மீறி, காய்கறிகளை விற்றதாக கூறப்படுகிறது. அப்போது காவல்துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சிறுவனின் உடல் மிக மோசமான நிலைக்கு செல்ல, அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர் காவல்துறையினர். ஆனால் சிறுவன் அதற்குள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். போலீஸ் அதிகாரிகள் கொடுமையாக தாக்கியதில் தான் சிறுவன் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். காவல்துறையினரின் இந்த கொடுமையான செயலை கண்டித்து பொதுமக்கள் பெரிதளவில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, 2 கான்ஸ்டபிள்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து சரியான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ஏன் அம்மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.