close
Choose your channels

உடையில் எத்தனை வெட்டு… நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட சர்ச்சை நடிகை!

Tuesday, November 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் ஓடிடி சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகை உர்ஃபிஜாவேத். இவர் தற்போது பொதுவெளியில் அணிந்திருந்த ஒரு உடை காரணமாக நெட்டின்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்தித் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபிஜாவேத். இவர் பொதுவெளியில் வித்தியாசமான உடைகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் பேஷன் விஷயத்தில் படு ஆர்வம் கொண்ட இவர் சிலநேரங்களில் நகைப்புக்குரிய விஷயங்களை செய்து மோசமான விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் ரிஸ்க் கட்அவுட் கொண்ட படு கிளாமர் உடையை அணிந்து கொண்டு பொதுவெளியில் இவர் நடமாடியிருக்கிறார். இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் நடிகையின் உடையைப் பார்த்து மிரண்டு இருக்கின்றனர். மேலும் சிலர் நடிகை உர்ஃபி ஜாவேத்தை புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மிடியாவில் பதிவிட்டு உள்ளனர்.

கறுப்பு நிறத்திலான அந்த உடையில் கழுத்து முதல் வயிறுவரை பல்வேறு இடங்களில் வெட்டப்பட்டு இருக்கிறது. படு கவர்ச்சியாக இருக்கும் இந்த உடையில்தான் நடிகை உர்ஃபி ஜாவேத் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மதிய உணவை சாப்பிடுவதற்காக உணவகத்திற்கு வந்துள்ளார். இதனால் நடிகை உர்ஃபி ஜாவேத்தை தற்போது நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சிலர் இவர் பிரபல மாடல் கெண்டல் ஜென்னரின் உடையை காப்பி அடிக்க முயற்சித்து இருப்பதாகவும் விமர்சித்து உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.