மே 17ஆம் தேதி மீண்டும் 'எலக்சன்'.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த நிலையில் மே 17ஆம் தேதி ’எலக்சன்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘உரியடி’ விஜயகுமார் நடிப்பில் உருவாகிய ’எலக்சன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புரோமோஷன் பணிகளும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘உரியடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜயகுமார் அதன் பிறகு ’உரியடி 2’ ’பைட் கிளப்’ போன்ற படங்களில் நடித்த நிலையில் ’எலக்சன்’ என்ற படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் பிப்ரவரி மாதம் வெளியான நிலையில் மே 17ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசர் அல்லது ட்ரைலர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதித்யா என்பவர் தயாரித்திருக்கும் இந்த படம் உரியடி விஜயகுமாருக்கு இன்னொரு வெற்றி படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய இன்னொரு நடிகர்.. இவர் லிஸ்ட்லயே இல்லையே..!

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஏற்கனவே உதயநிதி, கமல்ஹாசன், விஜய் ஆகியோர் ஒரு கோடி வழங்கி உள்ளதாகவும், சிவகார்த்திகேயன் 50 லட்சம் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது

எதிர்பார்த்தது 'ராயன் 'டீசர்.. ஆனால் வருவதோ வேற லெவல் படத்தின் டீசர்.. தனுஷ் ரசிகர்கள் குஷி..!

தனுஷ் நடித்த 50வது திரைப்படமான 'ராயன்' படத்தை அவரே இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

சண்டையில சாவறதுதான் வீரம்ன்னு சொல்லி கொடுத்துருக்காங்க.. அர்ஜுன் தாஸ் நடித்த 'ரசவாதம்' டிரைலர்..!

அர்ஜுன் தாஸ் நடித்த 'ரசவாதம்' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வாம்பயர் ஃபேஷியல் செய்வதன் மூலம் ஏற்படும் எச்.ஐ.வி! என்ன காரணம் ?

உடலின் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து எடுத்து,அதை சீராக்கி நம் உடலில் செலுத்தும் முறையே வாம்பயர் ஃபேஷியல் எனப்படும்...

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் ரஜினிகாந்த் இணைகிறாரா? ஆச்சரிய தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.