லெஜண்ட் சரவணன் நடிகை பெற்ற உயரிய விருது… இந்திய அளவில் குவியும் பாராட்டு!

“தி லெஜண்ட்“ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா “2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஐகான் பிலிம்பேர்“ விருதைத் தட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து சினிமா ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் ஸ்டைல் ஐகான், சிறந்த பேஷன் கலைஞர், நடிகை எனப்பல பரிமாணங்களோடு முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப்பல மொழிகளில் தயாரிக்கப்படும் பான் இந்தியா திரைப்படங்களில் அதிகளவில் நடித்து வருகிறார். அந்த வகையில் லெஜ்ண்ட் சரவணன் அருள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் “தி லெஜண்ட்” படத்தில் இணைந்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவில் நடிகை ஊர்வசி ரவுடேலாவிற்கு இந்த ஆண்டிற்கான சர்வதேச ஐகான் பிலிம்பேர் விருது கிடைத்துள்ளது. இதையடுத்து கடும் உற்சாகத்தில் இருக்கும் நடிகை ஊர்வசிக்கு அவரது ரசிகர்கள் பாராட்டுகளைத் தெதெரிவித்து வருகின்றனர்.

“ஹேட் ஸ்டோரி 4“, “விர்ஜின் பானுப்பிரியா“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே கடும் வரவேற்பை பெற்ற நடிகை ஊர்வசி ரவுடேலா சமீபத்தில் சவுதி அரேபியா வழங்கும் கோல்டன் விசாவை பெற்று இந்திய அளவில் தனிக்கவனம் பெற்றார். இந்நிலையில் ஜியோ ஸ்டூடியோ தயாரிப்பில் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் இணைந்து நடித்து வரும அவர், “டூப் கயே“, “இன்ஸ்பெக்டர் அவினாஷ்“, “பிளாக் ரோஸ்“, “வெர்சேஸ் பேபி “ எனப்பல படங்களை கைவசம் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

போல்ட் குயின்… நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் வைரல்!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா

வெண்பனி மலரே… வெண்மையில் அசர வைக்கும் வாணிபோஜன் புகைப்படங்கள்!

சமீபத்திய தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவராக உருவெடுத்து

'ஜெய்பீம்' நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும்: நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் தாசெ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெய்பீம்'  என்ற திரைப்படம் வரும் நவம்பர் 2ம் தேதி தீபாவளி விருந்தாக அமேசானில் வெளியாக உள்ளது.

புனித் ராஜ்குமார் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த ரசிகர்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் நேற்று மாரடைப்பால் திடீரென காலமான செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் ஒட்டுமொத்த திரையுலகினரும் நேற்று தங்களது

இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் புனித் ராஜ்குமார் பதிவு செய்த வாழ்த்து டுவிட்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் இறப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்து