சாதனை படைத்த ஜோபைடன்: அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம்!

அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி உலகத்தையே வழிகாட்டும் ஒரு பதவியாகத்தான் பார்க்கப்படுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி முகத்திலுள்ள ஜோபைடன் 1942 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி பிறந்தார்.

தற்போது வெற்றி முகத்தில் இருக்கும் ஜோபைடன் சிறு வயதில் தனது குடும்பத்திற்காக கடினமாக உழைத்து கஷ்டப்பட்டவர். ஒரு மனிதன் எந்த அளவுக்கு தாக்கப்படுகிறானோ, அந்த அளவுக்கு விரைவாக எழுந்து விடுவார் என்பது போல, சிறுவயதில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்பட்டார் ஜொபைடன். ஆனால் அவரது தாயார் அவரை அவ்வப்போது ஊக்குவித்து அவரை ஒரு திறமையான வலிமையான மனிதனாக வளர்த்து வந்தார். அவரது குழந்தை பருவத்திலும் இளமைப் பருவத்திலும் அவர் மிகுந்த பிரச்சினைகளை சந்தித்து இருந்தாலும், அவர் தனது கவிதை எழுதும் தன்மையால் சுற்றியுள்ள சிக்கலில் இருந்து மீண்டார்.

கிரேடு லெவல் பள்ளியில் அவர் தட்டுத்தடுமாறி படித்தாலும் அவரது கல்வியில் எந்தவிதமான தடுமாற்றம் இல்லை. அவர் சைராகஸ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சட்டம் படிக்கும்போது தான் அவர் தனது முதல் மனைவி நீலியாவை பார்த்தார். இருவருக்கும் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் இருந்தனர்.

ஆனால் பைடனின் வாழ்க்கையில் 1972ஆம் ஆண்டு ஒரு பெரும் சோகச்ம்பவம் நிகழ்ந்தது. அவரது மனைவி மற்றும் மகள் நவாமி ஆகிய இருவரும் எதிர்பாராத வகையில் ஒரு விபத்தில் மரணம் அடைந்தனர். அதே வாகனத்தில் அவரது 4 வயது மகனும் 2 வயது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த சோகத்தின் காரணமாக அவர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளக் கூட முடிவு செய்தார். ஆனாலும் உயிரோடு இருக்கும் மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் அந்த எண்ணத்தை கைவிட்டு மகன்களுக்காகவே அதன் பின்னர் வாழ தொடங்கினார்

இந்த நிலையில்தான் ஜோபைடன் அரசியல் ரீதியாகவும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருந்தார். 1972 ஆம் ஆண்டில் டெலவெயரில் இருந்து ஐக்கிய அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் ஆறாவது இளைய மேலவை உறுப்பினரானார். ஜோபைடன் நீண்டகால உறுப்பினராகவும், இறுதியில் மேலவையின் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். ஐக்கிய அமெரிக்க மேலவையில் பிடென் ஆறு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்

கடந்த 2008 ஆம் ஆண்டில் பராக் ஒபாமா அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது, துணை அதிபராக போட்டியிடும்படி ஜோபைடனை கேட்டுக் கொண்டார். அந்த தேர்தலில் பராக் ஒபாமா அதிபர் வேட்பாளராகவும் பைடன் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றனர். 46 வயதில் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார் ஜோபைடன்

ஜோபைடன் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டது குறித்து ஒபாமா கூறியபோது ’நான் ஒரு துணை ஜனாதிபதியை கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறுவதை விட, ஒரு நல்ல சகோதரனை கண்டுபிடித்தேன் என்று தான் கூறுவேன்’ என்று பாராட்டினார். நானும் ஜோபைடனும் வெவ்வேறு இடங்களிலிருந்து வெவ்வேறு தலைமுறைகளில் இருந்து வந்தோம். நான் அவரை அதிகம் பாராட்டுவதற்கு காரணம், அவர் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் மிகவும் தெளிவாக இருந்தார். அவர் என்னை ஒரு சிறந்த ஜனாதிபதியாக ஆக்கியுள்ளார். அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு அவரது அனுபவமும் வித்தியாசமான சிந்திக்கும் திறனும் எனக்கு உதவியது’ என்று கூறினார்

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட ஜோபைடன் வெற்றி பெற்றுவிட்டதாகவே அனைத்து மக்களும் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கா அரசியல் வரலாற்றில் வேறு எந்த வேட்பாளரை விடவும் ஜோபைடன் அவர்களுக்கு மக்களின் ஆதரவு அதிகம் உள்ளது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டு பராக் ஒபாமா பெற்ற வாக்குகளை விட அதிகமாக அவர் பெற்றுள்ளார்

77 வயதான ஜோபைடன் அவர்களின் தலைமை அமெரிக்காவை மேலும் ஒரு வல்லரசாக எடுத்துச் செல்லும் என்றே அந்நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும்போது ஜோபைடன் கூறியபோது, ‘மாற்றம் என்பது கடினமானது தான், ஆனால் அவசியமானது என்பதை நீங்கள் நிரூபித்து உள்ளீர்கள். முன்னேற்றம் என்பது எப்போதும் எளிதாக இருக்காது, ஆனால் அதே நேரத்தில் சாத்தியமானதுதான். ஒரு முழுமையான முன்னேற்ற பயணத்தில் அமெரிக்காவின் வரலாறு சிறப்பாக இருக்கும்படி செய்வேன்’ என்று கூறியுள்ளார்

ஜோபைடனின் தலைமையில் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராகவுள்ள கமலாஹாரீஸ் வழிநடத்துதலில் அமெரிக்காவின் வளர்ச்சியும் வல்லரசு தன்மையும் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதே உலக தலைவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

More News

பாக்கத்தான போற இந்த கோஹ்லியோட ஆட்டத்த... : 'பேய்மாமா' டிரைலர்

யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'பேய்மாமா' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

WhatsApp மூலம் பணப் பரிமாற்றமா??? ஆச்சர்யமூட்டும் புது அப்டேட்!

இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது

முதலில் கோபத்தை கடுப்படுத்துங்கள்… டிரம்பையே நேரம் பார்த்து பழி தீர்க்கும் சிறுமி கிரேட்டா!!!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பர்க்(17). இவர் சுற்றுச்சூழல் விவகாரங்கைளைக் குறித்தும் மாறி வரும் தட்ப வெப்பநிலையைக் குறித்தும்

சிம்புவின் சினேக் பிரச்சனைக்கு சுசீந்திரன் விளக்கம்!

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

எஸ்.ஏ.சி கட்சியில் இருந்து விலகிவிட்டேன்: விஜய் தாயார் ஷோபா!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் நேற்று விஜய்யின் பெயரில் திடீரென அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக வெளிவந்த