close
Choose your channels

முதலை அருகே விழுந்த கோல்ப் பந்து: எடுக்க சென்ற வாலிபரின் வீடியோ வைரல்!

Tuesday, December 15, 2020 • தமிழ் Comments

முதலை அருகே விழுந்த கோல்ப் பந்தை எடுக்கச் சென்ற வாலிபரின் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் கோல்ப் மைதானத்தில் வாலிபர் ஒருவர் கோல்ப் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து ஒன்று அருகில் உள்ள ஏரிக்கரை அருகே விழுந்தது. அந்த பந்தை அவர் எடுக்கச் சென்றபோது பந்தின் அருகே முதலை ஒன்று இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இருப்பினும் அவர் தைரியமாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அந்த பந்தை எடுத்தார். அப்போது முதலையின் வால் அவருடைய கையில் பட்டது. அவர் முதலைக்கு பயந்து ஓடி வரும் நிலையில் அந்த முதலை அந்த வாலிபருக்கு பயந்து தண்ணீருக்குள் சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலையின் மிக அருகில் சென்று தைரியமாக அந்த பந்தை அந்த வாலிபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனாலும் ஒரு கோல்ப் பந்துக்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடு வேண்டுமா என்று ஒரு சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Get Breaking News Alerts From IndiaGlitz