ஜோ பிடன் நிர்வாகத்தில் 20 இந்தியர்கள்… நீண்டுகொண்டே இருக்கும் பட்டியல்!

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன் நாளை மறுநாள் பதிவேற்க இருக்கிறார். இந்நிலையில் ஜோ பிடன் நிர்வாகத்தில் 13 பெண்கள் உட்பட 20 அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்க இருக்கிறார் என்பது வலிமை வாய்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர மேலும் பல இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஜோ பிடன் நிர்வாகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களில் 17 பேர் வெள்ளை மாளிகையின் முக்கியப் பதவிகளில் அமர உள்ளனர். அதில் 13 பேர் பெண்கள் என்பதும் சிறம்பம்சம். அமெரிக்காவின் அதிபராக இதுவரை எந்த பெண்ணும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை. இந்நிலையில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க உள்ளார். இவர் முதல் ஆப்பிரிக்க- இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் மேலும் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.

அமெரிக்காவில் 1% அளவிற்கு மட்டுமே வாழ்ந்து வரும் இந்தியர்களில் இதுவரை 20 பேர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 1.சிவிலியன் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பு செயலராக இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட உஸ்ரா ஜேயாவை நியமித்து இருக்கிறார் ஜோ பிடன். 2.நீரா டாண்டன்: பல்வேறு கூட்டாட்சி நிறுவனங்களுக்கான பட்ஜெட்டை உருவாக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் பட்ஜெட்டின் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 3.டாக்டர் விவேக் மூர்த்தி: அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக இவர் பதவியேற்க இருக்கிறார். 4. வனிதா குப்தா: நியூயார்க் ஸ்கூல் ஆஃப் லாவின் பழைய மாணவராக இவர் தற்போது இணை அட்டர்னி ஜெனரலாகத் தேர்வாகி இருக்கிறார்.

5.ஆயிஷா ஷா: வெள்ளை மாளிகையில் டிஜிட்டல் வியூக நிர்வாகத்தில் இவர் பணியாற்ற இருக்கிறார். 6. கவுதம் ராகவன்: இந்தியாவில் பிறந்து சியாட்டில் வளர்ந்தவரான இவர் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தில் துணை இயக்குநராகத் தேர்வாகி இருக்கிறார். 7. பாரத் ராமமூர்த்தி: ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக் கழகத்தின் புகழ் பெற்ற மாணவரான இவர் தற்போது பாஸ்டனில் வசிக்கிறார். தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 8. வினய் ரெட்டி: பேச்சு மற்றும் எழுத்து நிர்வாகத் துறையின் இயக்குநராக இவர் தேர்வாகி உள்ளார்.

9. தருண் சாப்ரா: ஆக்ஸ்போர்டு, ஹார்வர்ட், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற மாணவரான இவர் தற்போது டென்னசியில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கான மூத்த இயக்குநராக பதியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 10.சுமோனா குஹா: மேரிலாந்தில் வசித்துவரும் இவர் தெற்காசியாவின் மூத்த இயக்குநராக பணியாற்ற உள்ளார். 11. சப்ரீனா சிங்: துணை பத்திரிக்கை செயலாளராக பணியாற்ற உள்ளார். 12: வேதாந்த் படேல்: குஜராத்தில் பிறந்து கலிபோர்னியாவில் வசித்து வரும் இவர் உதவி பத்திரிகை செயலாளராக இருப்பார். 13: சாந்தி கலதில்: கலிஃபோர்னியா யு.சி பெர்க்லி மற்றும் லண்டன் ஸ்கூர் எக்னாமிக்ஸ் ஆகியவற்றில் படித்த புகழ்பெற்றவரான இவர் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்க பணியாற்ற உள்ளார்.

இந்தப் பட்டியலில் 20 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் முக்கியப் பொறுப்புகளில் வகிக்க உள்ளனர். இவர்களைத் தவிர மேலும் பல இந்தியர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

More News

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய பேரறிவாளர் தாயார்!

பிக்பாஸ் என்பது மற்ற மொழிகளில் ஒரு பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் தமிழில் மட்டும் இந்நிகழ்ச்சி பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆக்கபூர்வமான ஒரு நிகழ்ச்சியாக கமல்ஹாசன் கொண்டு செல்கிறார்

விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்: ரசிகர்களுக்கு ரஜினியிடம் இருந்து வந்த க்ரீன் சிக்னல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆன்மீக அரசியலை தமிழகத்தில் அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் ரஜினி மக்கள்

சுமார் 5000 கிமீ பைக்கில் எங்கு சென்றார் தல அஜித்?

தல அஜித் அவர்கள் ஒரு பைக் விரும்பி என்பதும் அவர் பல நேரங்களில் நீண்ட தூரம் பைக்கில் செல்வது குறித்த தகவல்கள் வெளிவந்திருக்கின்றன என்பதும் தெரிந்ததே

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு… மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்!

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

'மாஸ்டர்' படத்தின் 5 நாட்கள் வசூல்: உலக அளவில் சாதனையா?

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே