close
Choose your channels

உசைன் போல்டுக்கு கிரிக்கெட் வருமா? வைரல் வீடியோவை பார்த்து ஆச்சர்யப்பட்ட ரசிகர்கள்!

Friday, February 12, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் அதிவேக மனிதனாகக் கருதப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். காரணம் வீடியோவில் முதல் பந்தை தடுத்து ஆடிய உசைன் அடுத்த பந்தை கவர் டிரைவ் செய்து இருக்கிறார். இது குறித்து ரசிகர்கள் அவருக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பதில் அளித்துள்ள உசைன், “ஐ டூ குயிக் மேன்” என அசால்ட்டாக பதில் கூறியுள்ளார். 100மீ, 200மீ மற்றும் 4100மீ போன்றவற்றில் உலகச் சாதனை படைத்த உசைன் இதுவரை 8 ஒலிம்பிக் பதக்கங்களை தடகளப் போட்டியில் வாங்கி குவித்து இருக்கிறார். அதோடு கடந்த 2008, 2012, 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 3 முறை தொடர்ந்து 100மீ, 200மீ தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கி உலக ரசிகர்களையே அசர வைத்தார்.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த இவர் முன்னதாக கால்பந்து போட்டிகளிலும் கவனம் செலுத்தினார். இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பயிற்சி கிளப்பில் பயிற்சி எடுத்துக் கொண்டு சில போட்டிகளிலும் பங்கு கொண்டார். ஆனால் இவரது கால்பந்து விளையாட்டில் ஏதோ ஒன்று குறைகிறது என பயிற்சியாளர்கள் கூறியதை அடுத்து கால்பந்து விளையாடுவதை நிறுத்தி விட்டார். ஆனால் சிறுவயது முதலே இவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்து இருக்கிறது. அவ்வபோது தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் உசைன் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அனைத்துத் தடகளப் போட்டிகளிலும் இருந்து முழுமையாக விலகுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார் உசைன். தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டுள்ள உசைன் தனது நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். அதையொட்டி கிரிக்கெட் விளையாடிய வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.