close
Choose your channels

'வாடிவாசல்' படத்தில் இணைந்த 'அவதார்' படக்குழுவினர்.. வேற லெவல் தகவல்!

Sunday, January 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் ஆக வெளிவந்த தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் குறிப்பாக இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற ‘காட்ஸில்லா’, ‘அவதார்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த டிஜிட்டல் நிறுவனம் தற்போது 'வாடிவாசல்’ படத்தில் இணைந்துள்ளதாகவும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை அமைக்கும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் வேறலெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது ’விடுதலை’ என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் 'வாடிவாசல்’ படத்தை இயக்க தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.