சீரியல் நடிகையுடன் முறையற்ற காதல். சட்டை கிழிந்து சந்தி சிரித்த சம்பவம்

  • IndiaGlitz, [Friday,April 28 2017]

பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனம் தயாரித்து வரும் நெடுந்தொடர் 'வாணி ராணி'. இந்த நிறுவனத்தின் மேலாளரராக சுகுமாறன் என்பவர் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி, குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் 'வாணி ராணி' சீரியலில் நடித்து வரும் நடிகை சபீதா ராயை வீட்டிற்கு வரவழைத்து முறையற்ற காதலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சபீதா ராய்க்கும், சுகுமாறனுக்குக் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் சபீதாவை சுகுமாறன் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். ஆனால் சபீதாராய் வீட்டின் வெளியே நின்று சுகுமாறனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சுகுமாறனின் சட்டை கிழிந்தது. இருவரும் மாறி மாறி அடித்து கொண்டதால் அந்த பகுதியே பரபரப்பானது.

இதுகுறித்த தகவல் அறிந்த வளசரவாக்கம் போலீசார் சுகுமாறன், சபீதா ராய் ஆகியோர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரும்பாலான தமிழ் சீரியல்களில் முறையற்ற காதல், அடுத்தவர் மனைவி அல்லது கணவனுடன் தொடர்பு குறித்த கதையம்சமே இருப்பதால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில் அந்த சீரியல்களில் நடிப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் அதே நிலையை கடைபிடித்து வருவது வேதனையை தருவதாக உள்ளது.

More News

போலீஸ் வேடத்தில் நடிக்கும் கணவன்-மனைவி நடிக்கும் சிங்கிள் ஷாட் படம்

அருள்நிதி, இனியா நடித்த 'மெளனகுரு' படத்தில் அழுத்தமான போலீஸ் கேரக்டரில் நடித்த நடிகை உமா ரியாஸ்கான், மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் 'சென்னை விடுதி' இந்த படத்தில் அவருடைய கணவர் ரியாஸ்கானும் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஷெபி என்பவர் இயக்கியுள்ளார்...

லைகா நிறுவனத்துடன் இணையும் இயக்குனர் விஜய்

இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கை அவ்ர் இயக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தது...

நடிகராக எண்ட்ரி ஆகும் கண்ணதாசன் பேரன்

பழம்பெரும் கோலிவுட் நட்சத்திரங்களின் பேரன் பேத்திகள் சமீபகாலமாக கோலிவுட்டில் எண்ட்ரி ஆகி வருகின்றனர். நாகேஷ் பேரன் பிஜேஷ் சந்தானம் நடித்து வரும் 'சர்வர் சுந்தரம்' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ஒருசில படங்களில் நடித்து வருகிறார்...

ரசிகர்களுடன் விஜய்யின் திடீர் சந்திப்பு ஏன் தெரியுமா?

இளையதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது...

சமந்தாவின் சிலம்பாட்ட ரகசியம் இதுதான்!

பிரபல நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமந்தா சிலம்ப பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததை பார்த்தோம்...