close
Choose your channels

துருவ் விக்ரமின் 'வர்மா' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, December 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'வானோடும் மண்ணோடும்' என்ற பாடல் வரும் 27ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராதான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரின் மனதையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரம், மேகா, ஈஸ்வரிராவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவும் சதீஷ் சூர்யா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை முகேஷ் மேத்தா தயாரித்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.