தனுஷின் 20 வருட பயணம்: 'வாத்தி' படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்

நடிகர் தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகி உள்ளதை அடுத்து இந்த இருபது ஆண்டுகளில் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். மேலும் நேற்று தனது 20 ஆண்டு திரையுலக பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றையும் அவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தனுஷின் 20 ஆண்டு பயணத்தை குறிப்பிடும் வகையில் ‘வாத்தி’ படக்குழுவினர் வெளியிட்டுள்ள மாஸ் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனுசின் ’துள்ளுவதோ இளமை’ தோற்றம் மற்றும் ’வாத்தி’ தோற்றம் ஆகிய இரண்டும் சேர்ந்தால் போல் உள்ள இந்த போஸ்டரில் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கும் ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.

More News

கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டேன்: 10வது திருமண நாள் விழாவில் சினேகாவின் பதிவு

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து 10 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து ரொமான்ஸ் பதிவும், கலக்கலான புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'ஏகே 61'  படத்தில் இணைந்த சூப்பர்ஹிட் படத்தின் ஹீரோ!

தமிழில் சூப்பர் ஹிட்டான படத்தின் ஹீரோ ஒருவர் அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 61' படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சன்னிலியோனுக்கு முதுகு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு முதுகு மசாஜ் செய்துவிடும் நபரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்: 'ஜில்லா' பட நடிகை விருப்பம்

விஜய் நடித்த 'ஜில்லா' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் இறங்கி அடிச்ச குத்துபாட்டு: ரிலீஸ் தேதியை அறிவித்த அனிருத்!

கமலஹாசன் ஒரு சிறந்த பாடகர் என்பதும் 'அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ' உள்பட ஒருசில குத்துப்பாடல்களையும் அவர் பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே.