close
Choose your channels

வாத்தி கம்மிங்....இது வார்னர் வெர்சன்.....!இணையத்தில் வைரலாகும் வீடியோ....!

Monday, August 2, 2021 • தமிழ் Comments

வார்னரின் வாத்தி கம்மிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, விஜய் ரசிகர்களும் இதை கொண்டாடி வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். டிக் டாக் வந்ததில் இருந்து, தற்போது வரை இவர் சமூகவலைத்தளங்களில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். தனது குழந்தைகளுடனும், மனைவியுடனும் தமிழ் பாடல்களுக்கு நடனமாடி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருவார். இந்நிலையில் "போர் அடிக்கிறது, இந்த நடன அசைவை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்" என்பதை கேப்ஷனாக போட்டு, வாத்தி கம்மிங் பாடலுக்கு குழந்தையுடன் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz