close
Choose your channels

தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு

Saturday, September 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து பார்த்தோம். அதேபோல் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதியும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் பாடல்கள் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்கள் தனுஷ் ரசிகர்களை நிச்சயம் திருப்திபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.