இம்சை அரசனுக்கு வடிவேலு பச்சைக்கொடியா?

  • IndiaGlitz, [Sunday,June 24 2018]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் திடீரென நிறுத்தப்பட்டதாக கூறபட்டது.. இதுகுறித்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றபோது வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் தங்களுக்கு ரூ.7 கோடி நஷ்டம் என்றும், அந்த பணத்தை வடிவேலுவிடம் இருந்து வாங்கி கொடுக்க வேண்டும் என்று எஸ்.பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்தது

இந்த நிலையில் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் இந்த பிரச்சனை முடியவில்லை என்று கூறுவதால் குழப்பம் தொடர்கிறது.

'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் இந்த படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'டிக் டிக் டிக்' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்

அனுஷ்காவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திட்டு வாங்கிய நபர்

சமீபத்தில் ஓடும் காரில் இருந்து  குப்பையை வெளியே வீசிய நபரை அனுஷ்கா கண்டித்த வீடியோ ஒன்றை அவரது கணவர் விராத் கோஹ்லி  தனது டுவிட்டரில் வெளியிட்டு

தனுஷை அடுத்து இன்னொரு நடிகருக்கும் ஏற்பட்ட விபத்து

'மாரி 2' படத்தின் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பின்போது தனுஷுக்கு காயம் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகுகிறாரா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் திடீரென இந்த நிகழ்ச்சிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நான் பேசற இங்கிலிஷ் புரிஞ்சதா? செண்ட்ராயனை கலாய்த்த கமல்

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் தமிழில் தான் பேச வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் போட்டியாளர்களில் பலர் ஆங்கிலத்தில் தான் பேசி வருகின்றனர்.