வடிவேலுவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விதித்த நிபந்தனை!

  • IndiaGlitz, [Tuesday,September 14 2021]

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதும் சுராஜ் இயக்கத்தில் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வடிவேலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒரு அன்பு நிபந்தனை விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

வடிவேலு நடிக்கும் ’நாய் சேகர்’ திரைப்படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் நாராயணனிடம் பேச்சுவார்த்தை நடத்தி போது கண்டிப்பாக இசை அமைக்கிறேன், தலைவன் வடிவேலுவின் தீவிர ரசிகர் நான் என்று கூறிய சந்தோஷ் நாராயணன், உடனடியாக வடிவேலுக்கு போன் செய்து பேசியுள்ளார்

நான் உங்கள் தீவிர ரசிகன், உங்கள் படத்திற்கு இசையமைக்காமல் இருப்பேனா என்று கூறிய சந்தோஷ் நாராயணன், அதன்பின் கண்டிப்பாக நீங்கள் இந்த படத்தில் என்னுடைய இசையமைப்பில் ஒரு பாடலை பாட வேண்டும் என்று அன்பு நிபந்தனை விதித்துள்ளார். அந்த நிபந்தனைக்கு வடிவேலு ஒப்புக்கொண்டதாகவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வடிவேலு இந்த படத்திற்காக ஒரு பாடல் பாட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன