யோகிபாபுவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்!

  • IndiaGlitz, [Saturday,January 18 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரும் தற்போதைய மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்திலும் நடித்து வருபவருமான யோகிபாபு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வைபவ் நடித்துள்ள ’டாணா’ என்ற படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

’டாணா’ படத்திற்கு சென்சார் ’யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் ஜனவரி 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’சைக்கோ’ என்ற திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ள இந்த படத்தில் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி நல்லவர், வாய் தவறி கூறியிருப்பார்: பிரபல அரசியல்வாதி விமர்சனம்

சமீபத்தில் நடைபெற்றது துக்ளக் ஐம்பதாவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய ஒரு சில கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சொந்த ஊரில் மனைவி மகனுடன் பொங்கல் கொண்டாடிய ரஜினியின் புது மருமகன்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய மருமகனான விசாகன் மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 

வரலட்சுமியின் 3வது படம் குறித்த அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை வரலட்சுமி சரத்குமார் அதன்பின்னர் பல தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் நடித்தார்

இலங்கைக்கு ரஜினி வரலாமா? பிரதமரின் மகன் பதில்!

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னை வந்திருந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார் 

'மாஸ்டர்' படத்திற்காக மாளவிகா எடுத்த பயிற்சி!

பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகிக்கு அதிக வேலை இருக்காது என்றும் பாடல்கள் மட்டும் கிளாமருக்காகவே அவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது