லாஸ்லியா மாதிரி நல்ல பொண்ணா பாரு! 'சிக்ஸர்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

வைபவ், பாலக் லால்வானி, சதீஷ் நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்ஸர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மாலை நேரத்தில் பார்வைக்குறைபாடு உள்ள ஒரு கேரக்டரில் வைபவ் நடித்துள்ளார். இந்த குறைபாட்டால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவரது காதலியிடம் இந்த உண்மை தெரியாமல் அவர் காக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. படத்தின் பெரும்பாலான வசனங்கள் இந்த மாலைக்கண் நோய் குறித்தே நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி புகழ் ராமர், சதீஷ் காமெடி படத்தில் சிறப்பு அம்சமாக இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக 'எனக்கு லாஸ்லியா மாதிரி ஒரு பொண்ணு பாரு, அந்த பொண்ணு மோகன் வைத்யா மாதிரி அப்பப்ப எனக்கு கிஸ் கொடுக்கணும்' என்று வில்லனிடம் சதீஷ் பேசும் வசனம் நிச்சயம் தியேட்டரில் வரவேற்பை பெரும் என தெரிகிறது.

ஜிப்ரான் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் வைபவ்வுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.
 

More News

நாளை நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்!

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், மெகா ஸ்டார் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன்

'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெணே பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான 'வெறித்தனம்'

ரூ.500 கோடி 'இராமாயணம்' படத்தில் ஹிருத்திக்-தீபிகா?

இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் இந்த கதை எத்தனை முறை படமாக்கப்பட்டாலும்,

பற்றி எரியும் அமேசான் காடுகளுக்காக குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரம்!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீயை அணைக்க அந்நாட்டு தீயணணப்பு துறையினர் போராடி வருகின்றனர்

கவின் - லாஸ்லியா பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஆரம்பத்தில் நான்கு பெண்களிடம் சகஜமாக பழகி வந்த கவின், சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரிடமும் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே சாக்சி, லாஸ்லியா இருவரில் யாரை காதலியாக தேர்வு செய்வது