விஜய்சேதுபதி பட வில்லனாக அறிமுகமாகும் தமிழ் நடிகரின் தம்பி

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் கேரக்டர்கள் ஒவ்வொரு நாளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள சுனில் என்ற நடிகர் குறித்த விபரம் வெளிவந்தது. இவர் 'சரோஜா', 'கோவா', 'கப்பல்', 'அரண்மனை 2' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் வைபவ் அவர்களின் சகோதரர் ஆவார்.

இந்த படத்தின் வில்லன் கேரக்டர்களுக்கு முதலில் தயாரிப்பாளர் சி.வி.குமார், பாடகர் மனோ ஆகியோர்களிடம் பேசியதாகவும், ஆனால் ஒருசில காரணங்களால் அவர்களால் நடிக்க முடியவில்லை என்றும், ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் சுனிலை பார்த்ததும், அவர் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியதால் அவரை நடிக்க வைக்க முடிவு செய்ததாகவும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் கூறியுள்ளார்.

 

More News

விஷாலின் அடுத்த படத்திற்கு புரமோஷனை தொடங்கிய அரசியல்வாதி

கோலிவுட் திரையுலகினர் தற்போது ஒரு படத்தின் புரமோஷனுக்கு அரசியல்வாதிகளையே பெரிதும் நம்பியுள்ளனர். வெற்றி பெற வேண்டிய படங்களான 'மெர்சல்', 'சர்கார்' ஆகிய படங்களை சூப்பர் வெற்றி

கேரளா பாணியில் விஜய் செய்த நிவாரண உதவி

சமீபத்தில் கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் வழக்கம்போல் கோலிவுட் திரையுலகினர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களுடைய நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்

'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் குறித்த முக்கிய தகவல்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில்

ஜப்பான் நிசான் கார் கம்பெனியின் தலைவர் திடீர் கைது

உலகின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான ஜப்பானை சேர்ந்த நிசான் கார் கம்பெனியின் தலைவர் கார்லோஸ் கோஷ் என்பவர் நேற்று அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' ரன்னிங் டைம் குறித்த தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.