close
Choose your channels

'சர்கார்' விஜய்க்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு

Wednesday, November 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வழக்கம் விஜய்யின் 'சர்கார்' படம் குறித்தும் அரசியல்வாதிகள் பாராட்டியும், விமர்சனம் செய்தும் பேச ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே ஒப்பனிங் வசூலில் கிங் என நிரூபித்துள்ள 'சர்கார்' திரைப்படம், அரசியல்வாதிகளின் நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் கருத்துக்கள் இந்த படத்திற்கு இலவச புரமோஷனாக கருதப்படுகிறது.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்பட ஒருசில அரசியல்வாதிகள் 'சர்கார்' படம் குறித்தும் அதில் உள்ள காட்சிகள் குறித்து கருத்து கூறியுள்ள நிலையில் தற்போது வைகோ, 'சர்கார்' விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் சற்றுமுன் அளித்த பேட்டியின்போது, 'நடிகர் விஜய் பண்பானவர், அனைவரிடமும் மதிப்புடன் நடந்துகொள்பவர். திரைப்படங்கள், நாடகங்கள் மூலமாக அரசியல் ரீதியான கருத்துகளை கூறலாம். திரைப்படங்கள் மூலமாக சமுதாய சீர்திருத்த கருத்துகளை சொல்வது வழக்கமான ஒன்றுதான்'' என்று பாசிட்டிவ்வாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.