புதிய கல்வி கொள்கை குறித்து வைரமுத்து, குஷ்பு கருத்து!

மத்திய அரசு நேற்று அறிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி கட்டாயம் என்ற சரத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் கவியரசு கவிப்பேரரசு வைரமுத்து புதிய கல்வி கொள்கையில் உள்ள தாய்மொழி கல்வி கட்டாயம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது.

இதேபோல் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில், ‘புதிய கல்விக் கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் பாஜகவில் சேரப்போவதாக ஒரு சிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ள குஷ்பு, தற்போது தாய்மொழியில் கல்வி என்ற நல்ல விஷயத்தை பாராட்டி உள்ளதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே சூர்யா உள்பட பல திரையுலக பிரபலங்கள் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.