புதிய அழைப்பிதழ்: வைரமுத்துவின் டாக்டர் பட்டம் என்ன ஆச்சு?

பாடலாசிரியர் வைரமுத்து அவர்களுக்கு தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாகவும் இந்த பட்டத்தை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் வழங்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழைப்பிதழ் வெளியானது

இதனை அடுத்து இது குறித்து பாடகி சின்மயி தனது சமூக வலைப்பக்கத்தில் ஆவேசமாக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வருவதை தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது

இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள புதிய அழைப்பிதழில் வைரமுத்து மற்றும் ராஜ்நாத் சிங் பெயர்கள் மிஸ் ஆகி உள்ளது. எனவே வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் கொடுப்பது ரத்தாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வைரமுத்து இந்த டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்து விட்டதாகவும் ஒரு கருத்து சமூக வலைதளங்களில் பரவிவருகிறது

பாடகி சின்மயி பதிவு செய்த ஒரே ஒரு டுவிட்டால் ஒரு பல்கலைக்கழக டாக்டர் பட்டம் வழங்கு நிகழ்ச்சியில் மிகப்பெரிய மாற்றம் நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூ குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது