மண்ணிலிருந்து தானியம் வரும்; தானியம் சோறாகும். ஆனால்.. சூரியின் 'மண் சோறு' விவகாரம் குறித்து வைரமுத்து..


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சூரி நடித்த ’மாமன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அவருடைய ரசிகர்கள் மதுரையில் மண் சோறு சாப்பிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அடுத்து சூரி, ‘மண் சோறு சாப்பிட்டால் எப்படி படம் ஓடும்? படம் நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும், உங்களை எல்லாம் என்னுடைய தம்பிகள், என்னுடைய ரசிகர்கள் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது’ என்று காட்டமாக தெரிவித்து இருந்தார். அவருடைய கருத்து பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் சூரியின் இந்த கருத்து குறித்து கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
திரைக்கலைஞர்
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும்
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்
தங்கள் ரசிகர் கூட்டத்தை
இப்படி நெறிப்படுத்தி
வைத்திருந்தால்
கலையும் கலாசாரமும்
மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்
மண்சோறு தின்றால் ஓடாது
மக்களுக்குப் பிடித்தால்
மாமன் ஓடும்
பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை
‘பலே பாண்டியா’
என்று பாராட்டுகிறேன்
திரைக்கலைஞர்
— வைரமுத்து (@Vairamuthu) May 17, 2025
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று… pic.twitter.com/PF7rEDPDY0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments