முதல் நபராக உதவிட தயார்: வைரமுத்து அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் நிரம்பி விட்டதாகவும் புதிதாக கொரோனா நோயாளிகளை அனுமதிக்க படுக்கைகள் காலி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக மாற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை உள்பட பல நகரங்களில் ஓட்டல்கள் தற்போது கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் திருமண மண்டபங்களும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருமண மண்டபங்களை மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் முதல் நபராக தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,

முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.

மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?

More News

தமிழகத்தில் இன்றும் நாளையும் முழு போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு: எந்தெந்த கடைகளுக்கு விதிவிலக்கு?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் அதிகமாக பாதித்து வருவதை அடுத்து மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சொந்தமாக ஓடிடி தளம் தொடங்கிய அஜித்-விஜய் பட நாயகி!

தளபதி விஜய் மற்றும் தல அஜித்துடன் நடித்த நடிகை ஒருவர் சொந்தமாக ஓடிடி தளத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்

கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு பலியாகி வரும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது 

இது ஆரம்பம் இன்னும் நிறைய காத்திருக்கு: 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு 'பிகில் நடிகை வாழ்த்து

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் 'குக் வித் கோமாளி