தடுப்பூசி போட்டும் வேதியியல் மாற்றங்களை உணர முடியவில்லை: வைரமுத்து

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துவரும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் இந்தியாவில் முதல் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் போடப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும், பொதுமக்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன் கவியரசு வைரமுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அதனால் தனது உடலில் நிகழும் வேதியல் மாற்றங்களை உணர முடியவில்லை என்றாலும் உளவியல் பாதுகாப்பை தன்னால் மறைக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நேற்று...
கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன்.

அதனால் உடலில் நிகழும்
வேதியியல் மாற்றங்களை
என்னால் உணர முடியவில்லை.

ஆனால்,
அது நல்கும் உளவியல் பாதுகாப்பை
என்னால் மறைக்க முடியவில்லை.

ஆகவே...
மாண்புமிகு மக்களே!
நீங்களும்...

More News

தெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய் சேதுபதி ஏற்கனவே தமிழில் 100 கோடி வசூல் செய்த ஒருசில திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

பாஜகவில் இணைந்தார் 80, 90களின் பிரபல ஹீரோ!

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளில் திரையுலகினர்கள் இணையும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

'தளபதி 65' லொகேஷன்களை பகிர்ந்த இயக்குனர் நெல்சன்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம்: கமல்ஹாசன் டுவீட்!

மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம் என கமல்ஹாசன் பதிவு செய்துள்ள ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது 

நாங்கள் சில ரகசியங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்: மேக்னாராஜின் வைரல் புகைப்படம்

ஆக்சன் கிங் அர்ஜுன் சகோதரரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.