நம்பிக்கை கொடுங்கள், நன்மை விளையும்: டெல்லி வன்முறை குறித்து வைரமுத்து!

டெல்லியில் கடந்த சில நாட்களாக சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 34 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமன்றி திரையுலகில் உள்ள ஒரு சிலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் அமைதி காக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து கவியரசு வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.

More News

'மாஸ்டர்' நடிகரை மிரட்டிய விஜய் ரசிகர்: டுவிட்டரில் பரபரப்பு

விஜய், அஜித், சூர்யா போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை தயாரிப்பவர்களுக்கு தயாரிப்பு பணி ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அந்த படங்கள் குறித்து அப்டேட்டை ரசிகர்களுக்கு

ரஜினிகாந்த்தை சந்தித்து CAA போராட்டத்தின் நியாயம் குறித்து விளக்க முஸ்லீம்கள் முடிவு..!

ரஜினியின் கருத்துக்கள் அதிர்ப்தியளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என அன்வர் பாதுஷாஹ் உலவி,ரஜினிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். 

ஒருவழியாக ஜப்பான் கப்பலில் சிக்கித் தவித்த இந்தியர்கள் தயாகம் திரும்பினர்

ஜப்பானுக்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகிஹோமா துறைமுகத்தில்

டென்னீஸ்க்கு குட்பை!!! – அசத்தல் நாயகி மரிய ஷெரபோவோ

திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், சொக்க வைக்கும் அழகு என அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறும்

'இந்தியன் 2' விபத்து: கமல் கடிதத்திற்கு லைகா பதில்

சமீபத்தில் நடந்த 'இந்தியன் 2' பட விபத்து குறித்து அந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன், தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்