நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே! வைரமுத்துவின் உருக்கமான கவிதை

  • IndiaGlitz, [Thursday,August 27 2020]

நீதிமன்றத்தின் நெடுந்தூண் சாய்ந்ததே! வைரமுத்துவின் உருக்கமான கவிதைஇன்று காலை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 78. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சையின் பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவரது மனைவி மீனாட்சி ஆச்சி உடல்நலக்குறைவு காரணமாக காரைக்குடியில் காலாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமண் உடல் தேவக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்த இவர், பொது இடத்தில் புகை பிடிக்க தடை உள்பட பல பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் மறைவு குறித்து கவியரசர் வைரமுத்து அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக ஒரு கவிதை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீதியரசர் 
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!

நீதிமன்றத்தின் 
நெடுந்தூண் சாய்ந்ததே!

தமிழர்களின் 
இந்திய அடையாளம் அழிவுற்றதே!

கலைஞர் வெளியிடக் 
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!

இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!

அனைவர்க்கும் 
என் அழுகை இரங்கல்

கவியரசர் வைரமுத்துவின் இந்த கவிதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

 

நீதியரசர்
ஏ.ஆர்.லட்சுமணன் மறைந்தாரே!

நீதிமன்றத்தின்
நெடுந்தூண் சாய்ந்ததே!

தமிழர்களின்
இந்திய அடையாளம் அழிவுற்றதே!

கலைஞர் வெளியிடக்
கருவாச்சி காவியம்
முதற்படி பெற்ற பெருமகனாயிற்றே!

இனி எங்கு பெறுவோம்
அவர் போலொரு தங்கச் சிங்கத்தை!

அனைவர்க்கும்
என் அழுகை இரங்கல்.

— வைரமுத்து (@Vairamuthu) August 27, 2020

More News

தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்துக்கு மூளையாக இருந்த தாவூத் இப்ராஹிம், பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

நெருங்கி வந்த கரடி, அசையாமல் செல்பி எடுத்த இளம் பெண்கள்: வைரலாகும் வீடியோ 

மெக்சிகோ நாட்டிலுள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் மூன்று இளம் பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவர்கள் முன் கரடி ஒன்று வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி கேட்ட மதுரை விவசாயி: எங்க போய் முடியுமோ?

இந்திய அரசால் தேடப்படும் பாலியல் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற புதிய நாட்டை தோற்றுவித்துள்ளதாகவும், அந்நாட்டிற்கு தானே அதிபர் என்றும் சமீபத்தில் பிரகனப்படுத்தி கொண்டார்

'பிகில்' படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நடிகர்: 10 மாதங்களுக்கு பின் வெளியான ரகசியம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

எஸ்பிபி உடல்நிலை குறித்து சரண் மற்றும் மருத்துவமனையின் தகவல்

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்