பாலியல் குற்றச்சாட்டுக்கு வைரமுத்து அளித்த பதில்

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

கடந்த இரண்டு நாட்களாக கவியரசர் வைரமுத்து மீது ஒருசில பெண்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வகை பெண்களுக்கு ஆதரவு கொடுத்த பாடகி சின்மயி, ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சுவிட்சலார்ந்து சுற்றுப்பயணத்தின்போது வைரமுத்து தன்னிடமும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வைரமுத்து மீது எழுந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது;

'அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்' என்று கூறியுள்ளார்.