"காதலன் வணங்குகிறேன்"....! கண்ணதாசனுக்கு வாழ்த்து கூறிய வைரம்....!

கவிஞர் கண்ணதாசனின் 95-ஆவது பிறந்தநாளுக்கு, பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள் வாழ்த்து ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய யதார்த்தமான பாடல் வரிகளாலும், தத்துவ பாடல்களாலும் ரசிகர்களின் மனதை வென்றெடுத்தவர் தான் கவிஞர் கண்ணதாசன். காலம் கடந்தும் இன்றைய காலத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்று சொன்னால் அது உண்மைதான். கவிஞர், பாடலாசிரியர், நடிகர், வசனகர்த்தா, எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்ட, மாபெரும் கலைஞர் தான் கண்ணதாசன். சிறுகூடல்பட்டியில் பிறந்து தனது வரிகளால், மக்கள் மனதில் ஆட்சி கொண்டிருக்கும் தலைசிறந்த தமிழ்க்கவிஞர். தமிழ் திரையுலகில் 5000 அழகான பாடல்களை எழுதி, ரசிகர்களை தன்வசியப்படுத்தியவர். 232 புத்தகங்களையும், 6000- த்திற்கும் அதிகமான கவிதைகளையும் புனைந்துள்ளார்.

இன்று கவியரசரின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து, கண்ணதாசன் பற்றி கூறியிருப்பதாவது,

உன் பிறந்தநாளில் காதலன் வணங்குகிறேன் கவியரசே!
பாட்டு மொழிக்கு உயரமும் ஒய்யாரமும் தந்தவனே!
உன் வரிகளில் வாழ்கிறாய்....
நீ உன் வரிகளோடு வாழ்கிறோம் நாங்கள்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை -
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை..
என்ற அழகான வரிகளை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

More News

தமிழ் நடிகை ஆர்டர் செய்த சாப்பாட்டில் கரப்பான்பூச்சி: அதிர்ச்சியுடன் செய்த பதிவு

பிரபல தமிழ் நடிகை ஒருவர் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

'பிக்பாஸ் சீசன் 5' போட்டியாளர்களுக்கு முக்கிய நிபந்தனை: என்ன தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா மோதும் காட்சி: 'மாநாடு' படத்தின் மாஸ் தகவல் சொன்ன வெங்கட்பிரபு!

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாநாடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து

ஸ்பெஷல் நபருக்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறிய தமன்னா: வைரல் வீடியோ!

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர்

மீத்தேன், நியூட்ரினோ பேராட்ட வழக்குகள் வாபஸ்… சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவிப்பு!

இன்றுகாலை தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசினார்.