close
Choose your channels

கமல் கட்சியுடன் கூட்டணி அமைத்த இன்னொரு அரசியல் கட்சி

Saturday, March 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி நிலையில், ஒரே ஆண்டில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளார். எந்தவொரு பெரிய கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், யாருடனும் சமரசம் செய்யாமல் தனது கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் சமீபத்தில் அறிவித்தார். மற்ற தொகுதிகளின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல் கட்சியுடன் ஏற்கனவே கூட்டணியில் இணைந்த இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியும் மூன்று சட்டமன்ற தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர்கள் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

இந்த நிலையில் மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 'வளரும் தமிழகம் கட்சி' ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைந்துள்ளது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வளரும் தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மேலும் 'வளரும் தமிழகம் கட்சி'யும் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் எனவும் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.