close
Choose your channels

வலிமை பட நாயகியின் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

Friday, May 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை“ திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்தப் படம் வரும் ஆக்ஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது என்பதை ஏற்கனவே படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்நிலையில் வலிமை படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கும் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி தனது இன்ஸ்டாவில் ஸ்டைலிஸ் ஆன போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது.

நடிகை ஹுமா குரோஷி ஏற்கனவே இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான “காலா” திரைப்படத்தில் நடித்து இருந்தார். மிகுந்த வரவேற்பை பெற்ற அரசியல் படமான அந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் இளம் வயது காதலியாக வந்து வலிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அவர் தற்போது தல அஜித்துடன் இணைந்து “வலிமை” திரைப்படத்தில் நடித்து உள்ளார். டெல்லி பல்கலைக் கழகத்தில் நடிப்புத் துறையில் பட்டம் பெற்ற இவர் ஆரம்பத்தில் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் சில வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார். பின்பு கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான Gangs of Wesseylarry படத்தில் நடித்து பிரபலமானார்.

ஹிந்தி தவிர மாலையாளம் மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்த இவர் தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் மற்றும் தல அஜித் என இருபெரும் பிரம்மாண்ட நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். இந்நிலையில் அவருடைய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.