ரிலீசுக்கு முன் 'வலிமை' ஸ்பெஷல் புரமோ: அஜித் ரசிகர்களுக்கு ஆக்சன் விருந்து!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் இறுதி ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ கிட்டத்தட்ட ஒரு நிமிடம் இருக்கும் நிலையில் இந்த வீடியோவில் உள்ள அனைத்து காட்சிகளும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது .

அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பைக் சேசிங் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் இந்த புரமோவில் உள்ள நிலையில் இந்த படத்தை உடனடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் உள்ளதாக அஜீத் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை ’வலிமை’ படம் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ‘வலிமை’ படத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு பணியை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
 

More News

முதல் வேலை முடிந்துவிட்டது: யுவனுடன் இணைந்து போஸ் கொடுத்த அமீர்!

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து முதல் பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக இயக்குனர் அமீர் தெரிவித்து இருவரும் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

நினைவு நாளில் அம்மா பாடல், பிறந்த நாளில் ரிலீஸ்: வலிமை-ஜெயலலிதா ஒற்றுமை குறித்து உதவியாளர்!

'வலிமை'  திரைப்படம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வெளியாகிறது என்றும் அம்மாவின் பாடல் வைத்து அஜித் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தியிருப்பதாகவும்,

மறைந்த நடிகை லலிதாவின் கடைசி படம்: இயக்குனர் வெளியிட்ட வீடியோ வைரல்!

விஜய், ஷாலினி நடித்த 'காதலுக்கு மரியாதை' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா இன்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

நீங்களுமா? 'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில் வெளியான

'வலிமை' ரிலீஸ் ஆகும் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை இத்தனையா? முதல்முறை செய்த சாதனை!

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் ரிலீஸ் ஆகாத ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையில் 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.