உதயநிதி எம்.எல்.ஏவை சந்தித்த 'வலிமை' தயாரிப்பாளர்!

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் மிகச்சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருகிறார் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்எல்ஏ ஆன உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து கடந்த சில வாரங்களாக திரையுலக பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் மரியாதை நிமித்தமாக இன்று உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து உள்ளார்.

இந்த சந்திப்பின் போது ராகுல் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நட்பு ரீதியான இந்த சந்திப்பின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.