அந்த ஐந்து நாட்களுக்கு பின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,July 29 2021]

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் பிரமாண்டமான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டபோதிலும் இன்னும் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டும் பாக்கி உள்ளது. இந்த நிலையில் ‘வலிமை’ படக்குழுவினர் அடுத்த வாரம் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர் என்றும் அங்கு ஐந்து நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பியதும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் விரைவில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளிவரும் என்ற தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அஜித் ஜோடியாக ஹூமா குரேஷ்ஹி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் தலைமையில் நடந்த சினேகன்-கன்னிகா திருமணம்: வைரல் புகைப்படம்!

பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

தமிழ் குறித்த சர்ச்சை: பிரபல இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட அல்போன்ஸ் புத்திரன்!

தமிழ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதற்காக பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மன்னிப்பு கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கோமா நிலைக்கு சென்ற 'வாணி ராணி' சீரியல் நடிகர்: அதிர்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள்!

ராதிகாவின் 'வாணி ராணி' என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற உள்ளதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பிரபல தமிழ் நடிகர் தவறி விழுந்து காயம்: மருத்துவமனையில் அனுமதி

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும் போது தவறி விழுந்து காயம் அடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடலூரில் அதிமுக நடத்திய 'வட்ட போராட்டம்'....! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்....!

சமூக இடைவெளியை தவறாக புரிந்துகொண்ட அதிமுக-வினர் நடத்திய வட்ட போராட்டம், நகைச்சுவை உணர்வை உண்டாக்கியுள்ளது.