'வலிமை' ரிலீஸ் ஆகும் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை இத்தனையா? முதல்முறை செய்த சாதனை!

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் ரிலீஸ் ஆகாத ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையில் ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் முதல் முறையாக ’வலிமை’ திரைப்படம் ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சென்னை மதுரை கோவை போன்ற நகரங்களில் கிட்டத்தட்ட 100 சதவீதம் திரையரங்குகளில் ’வலிமை’ படம் தான் நாளை திரையிடப்படவுள்ளது..

சென்னையின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்க வளாகமான மாயாஜாலில் மட்டும் 70 காட்சிகள் முதல் நாளில் திரையிடப்பட உள்ளன என்பதும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் கடந்த 2 நாட்களுக்கு முன்பே முன்பதிவு ஆகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .

தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் ஏராளமான திரையரங்களில் ’வலிமை’ திரைப் படத்தை ரிலீஸ் செய்ய திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே இதுவரை இல்லாத வகையில் முதல் நாள் வசூல் ’வலிமை’ செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற உதயநிதி, பா ரஞ்சித்: காரணம் இதுதான்!

இயக்குனர் மாரி செல்வராஜின் இல்லத்திற்கு நேரில் உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித் உள்பட பிரபலங்கள் சென்று வாழ்த்து தெரிவித்ததன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இப்படியா எடுத்தார்கள் 'வலிமை' ஸ்டண்ட் காட்சியை? திலீப் சுப்பராயன் பகிர்ந்த மாஸ் புகைப்படங்கள்!

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு எண்ணிக்கையை பார்க்கும்போது இந்த படத்தின் முதல் நாள்

உக்ரைனில் போர்ப்பதற்றம் தொடர்பாக அமெரிக்கா எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

உக்ரைனில் ரஷ்யா இராணுவம் ஊடுருவி தொடர்ந்து பதற்றத்தை

அஜித்தின் 'வலிமை' படத்தில் இடம்பெற்ற மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் நாளை உலகம் எங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் இடம்பெற்றுள்ளதாக

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்: நடிகர் சங்க வாக்குகள் எண்ண தடையா?

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணலாம் என சற்று முன்னர் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பதை பார்த்தோம் .