எதிர்பார்த்ததை விட சிறப்பான அப்டேட்: 'வலிமை' நடிகர் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,September 22 2020]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகள் மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்துள்ளதை அடுத்து விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு அஜித் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து திக்குமுக்காட வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்திகேயா பதிவு செய்தபோது, ‘தல அஜித்தின் ரசிகர்கள் காட்டிய பேரன்புக்கு தனது நன்றி என்றும் நான் அவர்களை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். இதற்கு கைமாறாக அவர்களுக்காக கடுமையாக வலிமை படத்தில் நன்றாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்

மேலும் ’கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரப் போகுது, என்ன நான் சொல்றது’ என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டை அஜித் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் ’வலிமை’ படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடிப்பது இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த ட்விட்டை அடுத்து அவர் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரஃபேல் ரகப் போர் விமானத்தை இயக்கப் போவது ஒரு பெண் விமானியா??? சுவாரசியத் தகவல்!!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து அதி நவீன ரஃபேல் ரகப் போர் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.

ஒரு Subscribe பட்டனை அழுத்தியதற்கு 40 கார்கள் பரிசு… மலைப்பை ஏற்படுத்தும் சம்பவம்!!!

யூடியூப் சேனலை நடத்தி வருபவர்களுக்கு பெரும்பாலும் அவர்களின் Subscribe எண்ணிக்கையைப் பொருத்தே வருமானம் கிடைக்கும்.

கொரேனா பரவலைத் தடுக்க அயோடின் கரைசலா??? அதிரடி காட்டும் புதுத்தகவல்!!!

அயோடின் கரைசல் கொரோனா வைரஸை முற்றிலும் செயலிழக்க செய்யும் என்ற புதுத்தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

ஹிந்தி தெரியாதா… அப்ப லோன் இல்ல… வங்கி மேலாளரின் செயலால் அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!!!

அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் அரசு தலைமை மருத்துராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியம்.

குழந்தையின் சிகிச்சைக்காக இதயத்தை விற்க முன்வந்த தாய்! அதிர்ச்சி அறிவிப்பு

கொச்சியை சேர்ந்த ஒரு பெண் தனது குழந்தையின் சிகிச்சைக்காகவும், வாங்கிய கடனை அடைப்பதற்காகவும் தனது இதயம் உள்பட அனைத்து உடல் உறுப்புகளையும் விற்க முன்வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது