close
Choose your channels

ஐபிஎல் கிரிக்கெட் கமெண்ட்ரியில் 'வலிமை' அப்டேட் கேட்ட வர்ணனையாளர்!

Monday, April 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் நேற்றுடன் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் நேற்று மூன்றாவது போட்டி கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடந்தது என்பதும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நேற்றைய போட்டியின் போது கிரிகெட் கமெண்டரி செய்த வர்ணனையாளர்கள் அஜித் நடித்த படங்களை மாறி மாறி கூறிக் கொண்டிருந்தது கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸல் விக்கெட்டை ஐதராபாத் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் வீழ்த்தினார். இதனை அடுத்து இந்த போட்டியை தமிழில் கமெண்ட் செய்து கொண்டிருந்த நடிகரும் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி, ரஸல் அவுட் குறித்து கூறிய போது ’வீரமாக விளையாட நினைத்து விவேகம் இல்லாமல் விளையாடி அவுட் ஆகி விட்டார் ரஸல்’ என்று கூறினார். உடனே அவர் அருகில் இருந்த இன்னொரு வர்ணனையாளர் விஸ்வாசமாக இருங்கள் என்று கூற, அதற்கு இன்னொரு வர்ணனையாளர் ‘வலிமை’ அப்டேட் குடுங்க என்று கேட்க அனைவரும் சிரிக்க, அந்த இடமே கலகலப்பானது

அஜித் நடித்த வீரம், விவேகம், விஸ்வாசம், வலிமை ஆகிய படங்களில் அடுத்தடுத்து கூறி கமெண்ட் செய்த வர்ணனையாளர்களுக்கு அஜித் ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.