ரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

ஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷாசேகல் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

அஜித் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய சாயிஷா, அஜித் எனது ஃபேவரேட் நடிகர் என்று பதிலளித்தார். அதேபோல் இளையதளபதி விஜய் குறித்து உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் மற்றும் கிங்' என்று பதிலளித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து அவர் கூறியபோது 'முழு மரியாதைக்குரியவர் என்று கூறினார்.

மேலும் தனுஷ் குறித்து அவர் கூறியபோது 'சூப்பர் எனர்ஜி உள்ளவர் என்றும் ஆடியன்ஸ்களை கட்டிபோடும் நடிப்பை தருபவர் என்றும் கூறினார். சிவகார்த்திகேயனை புத்திசாலி நடிகர் என்றும் சிம்புவை கிரேட் நடிகர் என்றும் புகழ்ந்தார். அனைத்து நடிகர்களுடனும் நடிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு ரசிகர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் கடைசியில் அவர் தன்னுடைய உரையாடலை முடித்துள்ளார்.

More News

ரஜினிக்கு சுப.உதயகுமாரன் கேட்ட 4 கேள்விகள்: இது அரசியலா? இல்லை பள்ளிக்கூடமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத வெற்றிடத்தில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பகல் கனவு கண்ட லட்டர்பேட் கட்சிகள் பதறுகின்றன.

பாகிஸ்தான் மக்களின் மனங்களையும் வென்ற தோனி & கோ

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கெத்து : ஆம்புலன்ஸ்க்காக ஜனாதிபதி காரை தடுத்து நிறுத்திய காவலர்

முதலமைச்சர் அல்லது அமைச்சர் வருகிறார் என்றால் சுமார் அரைமணி நேரம் வரை போக்குவரத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதைத்தான் நாம் இதுவரை பலமுறை பார்த்துள்ளோம்.

செல்பி பிரியர்களுக்கு ஆப்பு வைத்த உபி காவல்துறை

கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் செல்பி எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

விவசாயத்திற்காக சாப்ட்வேர் பணியை உதறித்தள்ளிய தமிழக இளைஞர்

விவசாயம் என்றாலே பாதுகாப்பு இல்லாத தொழில் என்றும், விவசாயம் பார்ப்பவர்கள் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றே கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்துகின்றன.