விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் பரபரப்பு நடிகை

  • IndiaGlitz, [Monday,August 28 2017]

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்தும், அதிக வெற்றிகளை கொடுத்து வரும் நடிகர் விஜய்சேதுபதி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இவர் நடித்த மற்றொரு படமான 'புரியாத புதிர்' படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'இதற்குத் தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் அந்த படத்திற்கு 'ஜங்கா' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 'சாயிஷா' நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமிபத்தில் வெளியான ஜெயம் ரவியின் 'வனமகன்' படத்தில் தமிழில் அறிமுகமாகி தனது நடிப்பாலும் நடனத்தாலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, சாயிஷா முதல்முதலாக இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.