close
Choose your channels

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கிவிட்டது.

இதன்படி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு படத்தில் முதல்முறையாக இணைந்துள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடலை சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.