close
Choose your channels

டிவி சீரியல் நடிகை வாணிபோஜன் நடிக்கும் படத்தின் டைட்டில்!

Tuesday, October 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு உள்பட ஒருசில சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற வாணிபோஜன், சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் கால்ஷீட் தேதி பிரச்சனை காரணமாக விலகியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் அசோக்குமார் மற்றும் ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடித்து வரும் ஒரு படத்தில் வாணிபோஜன் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே இந்த படத்தில் தான் வாணிபோஜன் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தில் டில்லிபாபுவின் ஆக்சஸ் பிலிம் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் இசையமைக்கின்றார். இந்த படத்திற்கு ‘ஓ மை கடவுளே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.