நான் இந்த அளவுக்கு ஒருநாளும் சிரித்ததே இல்லை.. வனிதாவின் நெருங்கிய தோழியா அஜித், விஜய் பட நடிகை?


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன், அஜித், விஜய், உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை, வனிதா விஜயகுமாருடன், சந்தோஷமாக நட்பை கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வனிதாவின் நெருங்கிய தோழியா இந்த நடிகை என ரசிகர்களுக்கு ஆச்சரியமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் விக்ரம் நடித்த ’ஜெமினி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். இதனைத் தொடர்ந்து அவர் அஜித் நடித்த வில்லன், விஜய் நடித்த திருமலை, கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், சரத்குமார் நடித்த அரசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கிரண், வனிதா உள்ளிட்ட சில நண்பர்கள் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
"என் வாழ்க்கையில் ஒருநாள் கூட நான் இவ்வளவு சந்தோஷமாக சிரித்தது இல்லை" என்று கிரண், அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். அதுபோல, வனிதாவும் "Friends" என்று பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments